உங்களது நாய் மீது உங்களுக்கு எவ்வளவு பாசம்? அதாவது பைத்தியம்! இலானா என்கிற மேக்கப் கலைஞர் தன்னில் ஒரு பாதியாக இருக்கும் அவரது ‘சைபீரியன் ஹஸ்கி’ என்கிற வகையைச் சேர்ந்த செல்ல நாயைப் போலவே மாறும் முயற்சியில் சமீபத்தில் இறங்கினார். அதைப் போலவே தானும் அச்சு அசலாக மேக்கப்பும் போட்டுக் கொண்டுள்ளார்.
செல்ல நாய்களுடன் சும்மா ‘செல்பி’ எடுக்கவே மகிழ்ச்சியாக இருக்கும்போது, ஒரே மாதிரி இருவரும் சேர்ந்து எடுக்கும்போது அது இரு மடங்காகாதா? வெறித்துப் பார்க்கும் கண்ணோடு நமது செல்ல நாய் இருப்பினும் நாம் அதை ரசிக்கிறோம் அல்லவா! அதுவும் நம்மை அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்.
இவரைப்போல தனது நாயுடனே பொழுதைக்கழிக்கும் பலருக்கும் இந்த மேக்கப் போட்டுக்கொள்ள உதவும் வகையில், அதனை யூடியூபில் வீடியோவாக பதிவேற்றியுள்ளார் இலானா.
அவர் தற்போது ‘சைபீரியன் ஹஸ்கி’ மேக்கப் மட்டுமே கற்றுத்தருகிறார்! விரைவில் நீங்கள் வளர்க்கும் நாயும் அந்த மேக்கப் டுடோரியலில் இடம்பெறும் என எதிர்பார்ப்போம்.
உலக அளவில் நாய் வளர்ப்போர் பலரில், அவர்களது நெருங்கிய உறவினரைக் காட்டிலும், 38 சதவிகிதத்தினர் நாயை நேசிப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர்!


0 Comments