Subscribe Us

header ads

தொல்பொருள் திணைக்களத்துக்கு பிரத்தியேகமான மொபைல் அப்ளிகேஷன்


மொபிடெல், தொல்­பொருள் திணைக்­க­ளத்­துடன் இணைந்து புத்­த­மை­வான மொபைல் அப்­ளி­கே­ஷ­னான ‘HeritageSL’ஐ அறி­முகம் செய்­துள்­ளது. இந்த அப்­ளி­கேஷன் மூல­மாக பொது­மக்­க­ளுக்கு இலங்­கையின் தொல்­பொருள் மற்றும் கலா­சார பாரம்­ப­ரியம் பற்றி அறிந்து கொள்­வ­தற்கு வரை­ய­றை­க­ளற்ற இல­வச வாய்ப்பு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
இடம்-­அ­டிப்­ப­டை­யாக கொண்ட இந்த அப்­ளி­கே­ஷனை மொபிடெல் வடி­வ­மைத்து தயா­ரித்­துள்­ளது. இலங்கை தொல்­பொ­ரு­ள் திணைக்­க­ளத்தின் 125 ஆவது வருட நிறைவை குறிக்கும் வகையில் இந்த அப்­ளி­கேஷன் iBeacon தொழில்­நுட்­பத்தில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
தொழில்­நுட்ப ரீதியில் மிகவும் வினைத்­திறன் வாய்ந்த மொபைல் அப்­ளி­கே­ஷ­னாக ‘HeritageSL’அமைந்­துள்­ளது. இதன் மூல­மாக பாரம்­ப­ரிய ஆய்­வு­களின் மூல­மாக கண்­ட­றிய முடி­யாத பிர­தான தொல்­பொ­ரு­ள் பகு­திகள் மற்றும் கலைப்­பொ­ருட்கள் பற்­றிய விப­ரங்­களை வழங்கும் வகையில் இந்த அப்­ளி­கேஷன் அமைந்­துள்­ளது.
பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு நட்­பு­ற­வான வகையில், இலங்­கையின் தேசிய பாரம்­ப­ரியம் பற்­றிய ஏரா­ள­மான இடங்­களின் தக­வல்­களை பிரத்­தி­யே­க­மான மொபைல் அனு­ப­வத்­தி­னூ­டாக மொபிடெல் வழங்­கு­கி­றது.
தேசிய பாரம்­ப­ரியம் மற்றும் தொல்­பொ­ரு­ள் பெறு­ம­தி­களை தேசிய எல்­லை­க­ளுக்­கப்பால் பிர­சா­ரப்­ப­டுத்த இலங்கை தொல்­பொ­ரு­ள் திணைக்­க­ளத்­துக்கு இவ் அப்­ளி­கேஷன் உதவும் வகை
யி­ல­மைந்­துள்­ளது. இந்த ஊட­கத்­தி­னூ­டாக பெற்றுக் கொள்­ளப்­படும்

தக­வல்­களை பிர­சு­ரங்கள், பயிற்­று­வித்தல், பொது­செ­யற்­பா­டுகள், தொடர்­பா­டல்கள் மற்றும் இலங்­கையின் பாரம்­ப­ரியம் மற்றும் வர­லாற்­றுடன் தொடர்­பு­டைய விப­ரங்­களில் பயன்­ப­டுத்த முடியும்.

Post a Comment

0 Comments