Subscribe Us

header ads

தேர்தல் ஆணையாளருக்கு குவியும் பாராட்டு!


நாலாபுறத்திலிருந்து தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
பொதுநலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்களுடன் இது குறித்து எமது செய்தியாளர் வினவிய போது தாம் எதிர்பார்த்ததை விட மிகவும் அமைதியான தேர்தலாக அமைந்திருந்ததாக தெரிவித்திருந்தார். இதேவேளை உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளும் தேர்தல் தொடர்பில் திருப்திகரமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதுடன் மதிய வேளையின் பின் மக்கள் ஆர்வம் அதிகரித்திருந்ததாகவும் பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய, சிறு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பெரும்பாலும் தேர்தல் அமைதியாகவே இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளதுடன் அனைத்து தரப்பிற்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments