-The Puttalam Tumes-
கன்னியமிக்க மத குருமார்களே! கல்விமான்களே! இளைஞர்களே! சகோதரிகளே! தாய்மார்களே!
புத்தளம் தொகுதியைச் சூழ பெரும்பான்மை இன மக்கள் அதிகமாக வாழும் ஆனைமடு, சிலாபம்,நாத்தாண்டி, வென்னப்புவ ஆகிய நான்கு தொகுதிகள் உள்ளன. கடந்த 26 வருடங்களாக நடைபெற்ற தேர்தல்களில் புத்தளம் வாக்காளர்களாகிய நாம் கொடுத்த வாக்குகள் அவர்களுக்கே சாதகமாக அமைந்து விட்டன. நாங்களும் ஓடி ஓடி சலித்து இறுதியில் 'ஒன்றுமில்லை - ஒருவருமில்லை'என்றாகிவிட்டோம்.
இந்த உதாரணத்தை முதலில் பாருங்கள். ஐந்து (5) சோற்றுப் பார்சல்கள் இருக்கின்றன. ஒரு (1) பார்சலை ஐந்து பேர் பங்குபோடுகின்றார்கள். மீதி நான்கு பார்சல்களையும் ஒரு பார்சலுக்கு ஒருவர் அல்லது இரண்டு பேர் என ஆறு பேர் சாப்பிடுகின்றார்கள். இப்போது ஐந்து பேர் பங்குபோடும் பார்சலை சாப்பிடுவோர் அதிகம் சோறு சாப்பிடுவார்களா? அல்லது ஒன்று இரண்டு பேர் சாப்பிடும் பார்சலில் அதிகம் சோறு சாப்பிடுவார்களா? நிச்சயமாக, ஒன்று இரண்டு பேர் சாப்பிடும் பார்சலில் தான் அதிகம் உணவு கிடைக்கும்.
இதே நிலைதான் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியில் புத்தளம் தொகுதிக்கு மட்டும் ஐந்து வேட்பாளர்கள். ஏனைய நான்கு தொகுதிக்கும் சேர்த்து ஆறு பேர். புத்தளம் தொகுதியில் உள்ள வாக்குகள் ஐந்து பேருக்கு பங்குபோடப்படும். ஆனால் மிகுதி நான்கு தொகுதிகளிலும் உள்ள வாக்குளை அந்தந்த தொகுதி வேட்பாளர் முழுமையாக பெற்றுக்கொள்வார். இனி எப்படி புத்தளம் தொகுதியில் போட்டியிடும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் பாராளுமன்றம் தெரிவாகுவார்கள் ?
இந்நிலையில் PPAF வகுத்த புதிய வியூகத்தினால் 'ஒட்டகக் கூட்டணி'க்கு இடும் வாக்குகள் வெளி தொகுதிகளுக்குச் சிதறாது. நிச்சயம் புத்தளம் தொகுதிக்கு ஒரு MPயைக் கொண்டுவரும். மிகவும் குறைந்த வாக்குகளினால் சுமார் 20,000 - 25,000 இலகுவாக ஒரு MPயைப் பெற்றுக்கொள்ளலாம்.
தன்மானத்துடன் சிந்திப்போம். தலை நிமிர்ந்து நிற்போம். எமது வாக்கு பலத்தை கொண்டு எமக்கானMPயைப் பெற்றுக்கொள்ள வழி பிறந்துவிட்டது. 'ஒட்டகக் கூட்டணி'யை முன்னிலைப்படுத்தும் PPAFஇன் முதன்மை வேட்பாளர்கள் மூவருக்கும் வாக்களித்து வெற்றியை உறுதி செய்வோம்.நல்லாட்சிக்கான பயணத்தில் இணைந்துகொள்வோம்.
by: PPAF


0 Comments