Subscribe Us

header ads

ஞானசாரருக்கு எதிராக விசாரணை


தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 8ஆம் திகதியன்று வெலிப்பனை பொலிஸ் பகுதியில் பொலிஸ் அனுமதியின்றி கோயில் ஒன்றுக்குள் பிரசாரக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இது தேர்தல் சட்டத்தை மீறும்செயலாகும் என்று சுட்டிக்காட்டியபோது ஞானசார தேரர், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து மத்துகம நீதிவானின் உத்தரவின் பேரில் ஞானசார தேரர் விசாரணை செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments