Subscribe Us

header ads

கட்சி தாவல்களுக்கும் விலைபோதலுக்கும் சரியான மருந்து..

-Aboo-


தேர்தல் காலம் வந்து விட்டாலே, பல கோடிகள் புரளும், கட்சி தாவல்கள் கொடி கட்டி பறக்கும், செல்லாக்காசுச எல்லாம் செருக்கோடு பேரம் பேசும்... இதனை கடந்த ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தலில் தெளிவாக புரிந்துக் கொள்ளக்கூடியதாக இருந்தது. இதில் மஹிந்த அணி பக்கம் தாவியவர்கள் பல கோடிகளுக்கு விலை போனார்கள், மைத்ரி பக்கம் பாய்ந்தவர்கள் ஒரு குறிக்கோளுக்காக பாய்ந்தனர் பலர்; மக்கள் மாறி நிற்பதை அறிந்து பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின் வேறு வழி இன்றி நமது நானா மார்களும் இறுதியில் பாய்ந்தனர்.



அது இந்த பொதுத் தேர்தலிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இவர்கள் எங்கிருந்து எங்கு தாவுகிறார்கள் என்று பார்த்தல், பலவீனமான பக்கம் இருந்து பலமான பக்கத்திற்கு தாவுவார்கள். ஆனால் , கடந்த ஜனாதிபதி தேர்தலில் நடந்தது அதற்கு நேர்மாற்றமான ஒரு நிகழ்வு.



சரி இப்போது நமது உள்ளூர் அரசியலை கொஞ்சம் பார்ப்போம். நேற்றைய தினம் ஆப்தீன் யெஹ்யா என்ற முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஒட்டக கூட்டணியில் இருந்து UNP க்கு ஆதரவு அளிப்பதாக ஒரு தகவல் பரவியது. 


தேசிய அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை இப்பிரச்சினை காணப்படுகிறது. இதற்கான தீர்வு என்ன? 

இந்த ஜனநாயக அரசியல் அமைப்பின் பிரகாரம் ஒவ்வொரு பிரஜைக்கும் தமது பொருத்தமான பிரதிநிதியை தேர்வு செய்யும் முழு சுதந்திரமும் உண்டு. ஆனால், கட்சி தாவல்கள், தம்மை தெரிவு செய்யும் மக்களை கருத்தில் கொண்டதாகவா அமைகின்றது என்றால் , அதற்கு 'இல்லை' என்பதே பதிலாக அமையும். 

எனவே மக்களாகிய நாம் இனியும் தனி நபர்கள் மீது அலாதியான நம்பிக்கை வைத்து, அவரை பாராளுமன்றம்,மாகாண சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை என்று அனுப்பி ஏமாந்தது போதும். இதற்கான ஒரு தீர்வாக நாம் முன் வைப்பதே நிறுவன மயப்படுத்திய ஒரு அரசியல் அமைப்பு. இதில் "One Man Show" இருக்காது, மக்களுக்கு பொறுப்பு கூறக் கூடிய வகையில் பலதரப்பு பிரதிநிதகளையும் கொண்ட ஒரு தலைமைத்துவ குழு அதனை வழி நடாத்தும். 

பரந்து பட்ட ரீதியில் மக்களின் பிரச்சனைகளை இந்நிறுவனம் தமது மக்கள் பிரதிநிதிகள் மூலம் கையாளும். இதனுள் வந்து தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கும் ஒருவர் தெரிவாகி ஒரு பதவிக்கு வந்த பின் இந்நிறுவனத்தின் தலைமைத்துவ குழுவுக்கு கட்டுப்படாமல் நடப்பார் என்றால், அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அவருடைய அரசியல் பயணம் நிர்க்கதி ஆகிவிடும். 

இதனை மீறியும் பல திருகு தாளங்களை நமது அரசியல் தலைவர்கள் செய்யக்கூடும்.ஆனால், இப்பொழுது இருக்கும் முறைமையை விட ஒரு சிறந்த அரசியல் சூழலை நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு உருவாக்கும் என்பதில் இம்மி அளவும் ஐயம் இல்லை.எனவே இவ்வாறான நீண்ட கால தீர்வுகளுடன் கூடிய ஓர் அரசியல் பயணத்தை ஆரம்பிப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 


சிந்திப்போம், செயல்படுவோம்.

Post a Comment

0 Comments