Subscribe Us

பாலைவனத்தில் சிக்கித் தவித்த குடும்பம்: சிறிதளவு தண்ணீரையும் மகனுக்கு கொடுத்து விட்டு உயிர் துறந்த பெற்றோர்

அமெரிக்க பாலைவனத்திற்கு சுற்றுலா சென்ற தம்பதியினர் அங்கு வீசிய அனல் காற்றால் பரிதாபமாக பலியாகினர்.

இதில் அவர்களுடைய 9 வயது மகன் மட்டும் அதிர்ஷடவசமாக உயிருடன் மீட்கப்பட்டான்.

பிரான்ஸ் நாட்டில் பார்கோஜின் நகரை சேர்ந்த டேவிட் ஸ்டெய்னர் (42), ஓர்னெல்லா ஸ்டெய்னர் ஆகிய இருவரும், தங்களது 9 வயது மகனுடன், நியூமெக்சிகோ மாகாணத்தில் உள்ள ஓடிரோ பாலைவனத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் நடைபயணம் மேற்கொண்டபோது, திடீரென அனல் காற்று வீசியதில், தம்பதியினர் அதன் வெப்பம் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தனர்.

அவர்கள் உடலில் இருந்து தண்ணீர் வெளியேறி தாகமிகுதியால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாலைவனத்தில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் இருவரது சடலங்களையும் மீட்டனர்.

மேலும் ஓர்னெல்லாவின் கழுத்தில் இருந்த கமெராவை வைத்து அவர்களது மகனும் வந்திருப்பதை அறிந்த அதிகாரிகள், பாலைவனத்தில் மயங்கி கிடந்த அச்சிறுவனையும் மீட்டனர்.

தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தி ஏற்கனவே அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின் படி, அந்த தம்பதியினர் தங்களிடம் இருந்த குறைந்த அளவு தண்ணீரை தனது 9 வயது மகனுக்கு கொடுத்து அவனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments