Subscribe Us

header ads

ரொனால்டோ, சுவாரஸை பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார் மெஸ்சி ...



ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப்பான பார்சிலோனாவில் அர்ஜென்டினாவின் கேப்டனும், முன்னணி வீரரருமான மெஸ்சி விளையாடி வருகிறார். இதே அணியில்தான் நெய்மர், சுவரஸ் ஆகியோரும் உள்ளனர்.

மற்றொரு கிளப் அணியான ரியல் மாட்ரிட்டில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடி வருகிறார்.

ஒருங்கிணைந்த ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய அணியில் சிறந்து விளங்கும் வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படும். அந்த வகையில், 2014-15-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் தேர்வுக்கான போட்டியில் மெஸ்சி, ரொனால்டோ, சுவாரஸ் ஆகியோர் இருந்தனர். இதில் அர்ஜென்டினா வீரர் மெஸ்சி மற்ற இருவர்களையும் பின்னுக்குத் தள்ளி விருதைப் பெற்றார்.

கடந்த 2010-11-ம் ஆண்டு இதே விருதை பெற்ற மெஸ்சிக்கு இது 2-வது முறையாக கிடைக்கும் விருதாகும். ரொனால்டோ கடந்த ஆண்டு இந்த விருதை பெற்றிருந்தார்.



Post a Comment

0 Comments