Subscribe Us

header ads

மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது: தேர்தல்கள் திணைக்களம்

உயர்தரப் பரீட்சையில் பங்குபற்றும் மாணவர்களை பாதிக்காத வண்ணம் கட்சிகள் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும் என தேர்தல்கள் திணைக்கம் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையே  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் ஆதரவாளர்களும் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் பரீட்சை தாள்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாணவர்;கள் தமது கையை உயர்த்தி பரீட்சை கண்காணிப்பாளர்களிடம் விளக்கம் பெற்று கொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments