Subscribe Us

தேர்தலில் நாம் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை : ஜே.வி.பி

நாம் விதைத்­ததை மக்கள் புரிந்­து­கொண்­டி­ருப்­பார்­க­ளானால் நாம் அறுவடை செய்திருப்போம் என நடந்து முடிந்த பொதுத் தேர்­த­லுக்கு வியாக்­கி­யானம் தெரி­வித்த ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக, மக்­க­ளுக்­கான எமது போராட்டம் பாரா­ளு­மன்­றத்­திற்கு மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­ட­தல்ல. அதற்கு வெளியே எமக்கு பலம்­பொ­ருந்­திய அர­சியல் போராட்­டத்­திற்­கான பலம் உள்­ளது என்றும் அவர் தெரி­வித்தார்.
பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி.யின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கை­யி­லேயே ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸா­நா­யக இவ்­வாறு தெரி­வித்தார்.

இங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,
பொதுத் தேர்தல் நீதி­யா­னதும் சுதந்­தி­ர­மா­ன­து­மாக இடம்­பெற்­றது. சில சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றாலும் பொது­வாக அமை­தி­யான தேர்தல் நடை­பெற்­றது.
இதற்­காக தேர்­தல்கள் ஆணை­யாளர் உட்­பட தேர்­தல்கள் திணைக்­கள ஊழி­யர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் திணைக்­களம் உட்­பட அரச அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் எமது நன்­றி­களை தெரி­விப்­ப­தோடு எமக்கு வாக்­க­ளித்த வாக்­க­ளிக்­காத அனைத்து மக்­க­ளுக்கும் எமது நன்­றி­களை தெரி­வித்துக் கொள்­கிறோம்.

கடந்த காலங்­களில் சிறிய பிர­தி­நி­தித்­துவம் பாரா­ளு­மன்­றத்தில் இருந்த போதும் மக்­க­ளுக்­காக குரல் கொடுத்தோம்.

நடந்து முடிந்த தேர்­தலில் நாம் எதிர்­பார்த்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­காத போதும் எமக்கு கிடைத்­துள்ள எம்.பி. பத­வி­களை நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­துவோம். தற்­போ­தைய சூழ்­நி­லையில் கூட்­ட­ர­சாங்­கமே அமையப் போகின்­றது. இந்த அர­சாங்­கத்தில் பங்­கா­ளி­க­ளாக நாம் இருக்க மாட்டோம்.
பாரா­ளு­மன்­றத்­திற்குள் எதிர்­கட்­சிக்­குள்ள பொறுப்பை நிறை­வேற்­றுவோம். மக்­க­ளுக்கும் நாட்­டுக்கும் நன்மை வழங்கும் திட்­டங்­களை அரசு கொண்டு வந்தால் ஆத­ரிப்போம். இல்­லா­விட்டால் எதிர்ப்போம். 19 ஆவது திருத்­தத்­திற்கு அமைய அர­சி­ய­ல­மைப்பு சபையில் எமது பங்­க­ளிப்பை பெற முயற்­சித்தால் அதற்கு எமது பங்­க­ளிப்பை வழங்­குவோம்.
அதே­வேளை செயற்­கு­ழுக்­களில் அங்கம் வகிப்­ப­திலும் எமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் எமது போராட்டம் வெறு­மனே பாரா­ளு­மன்றக் கட்­டி­டத்­திற்குள் மட்டும் வரை­ய­றுக்­கப்­பட்­டது அல்ல.
அதற்கு வெளியே தொழிற்­சங்கம் மாணவர் சங்கம் என பல்­வேறு வடி­வங்­களில் எமக்கு பரந்­து­பட்ட அர­சியல் பலம் உள்­ளது. இப்­ப­லத்தை நாம் பயன்­ப­டுத்­துவோம்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சமஷ்டி முறை தொடர்பில் எது­வி­த­மான பிரச்­சி­னையும் தலை தூக்­க­வில்லை.

எனவே அது தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையும் இல்லை. நாம் விதைத்ததை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை எனவே எம்மால் அறுவடை செய்ய முடியாமல் போனது. உண்மையை மக்கள் புரிந்து கொள்ளவார்கள் அப்போது நாம் விதைத்ததை அறுவடை செய்வோம் என்றும் அநுர குமார திஸாநாயக தெரிவித்தார்.

Post a Comment

0 Comments