Subscribe Us

பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த

எனக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி பாராளுமன்றம் சென்று அரசியலை தொடரவுள்ளதாக குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
பொதுத் தேர்தல் நிறைவுற்ற நிலையில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"2015 பொதுத் தேர்தல் முவுகளை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். 

தேர்தலில் எமது கூட்டமைப்புக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும்  எமது கட்சிக்காக படுபட்டு உழைத்த கட்சி ஆதரவாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

கிடைத்துள்ள மக்கள் ஆணையின்படி தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவேன் என்றும் நாட்டின் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி நாட்டுக்கு மக்களுக்கு செய்த சேவையை தொடர்ந்தும் செய்வேன் என்று அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments