இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புக்கள் நடத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இன்று நள்ளிரவு 12 மணி தொடக்கம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் தினமான எதிர்வரும் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பரீட்சார்த்திகளுக்காக வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடாத்துதல், செயலமர்வுகள், எதிர்பார்க்கப்படும் வினாத்தாள்கள் அச்சிடல், சுவரொட்டிகள், பிரசுரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடல் என்பன 1968 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க பொதுத்தேர்வுகள் சட்டத்தின் 22ஆம் பந்தியின் கீழ் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வொழுங்கு விதியை கருத்திற் கொள்ளாது செயற்படும் யாதேனுமொருவர் பிரிவினர் அல்லது நிறுவனம் இச்சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவராக கருதப்படுவார்.
எனவே இவ்வொழுங்கு விதியினை மீறுவோர் குறித்து அண்மையிலுள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையலுவலகம் அல்லது இலங்கை பரீட்சைகள் திணைக்களம் என்பவற்றுக்கு அறியத்தருமாறு வேண்டப்படுகின்றனர்.
பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ, பொலிஸ் தலைமையகத்துக்கோ, அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டோ அறிவிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.


0 Comments