ஜார்கண்ட் மாநிலத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 9 வயது மகளை, அவளது தந்தை தினமும் 4 கி.மீ. தொலைவில் உள்ள சுகாதார மையத்துக்கு தூக்கிச் சென்று வருகிறார். |
நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த ஹடியாபட்டா கிராமத்தில் சுரேந்திர சர்தார் (42) என்ற ஓட்டுநர் கடந்த யூலை 2ம் திகதி சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். பலத்த காயம் அடைந்த சிறுமி 1 கி.மீ. தூரம் வீட்டுக்கு தவழ்ந்து வந்து பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார். இது தொடர்பாக துமாரியா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பலாத்காரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலில் ராஞ்சி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 45 நாட்கள் தினமும் ‘டிரஸ்ஸிங்’ செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்பிறகு ராஞ்சி மருத்துவமனையில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் தினமும் தனது மகளை தூக்கிச் செல்கிறார் அந்த 55 வயது நபர். அவர் மேலும் கூறுகையில், எனக்கு என் மகள்தான் முக்கியம், நான் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். நான் சேமித்து வைத்த காசு எல்லாம் செலவாகி விட்டதால் இப்போது கடனாளியாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். |
0 Comments