பிறந்த நாள் விழா அனைவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய கொண்டாட்டமாகி விட்டது. சிலர் மிக ஆடம்பரமாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆனால் சீனாவில் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சிசுவான் மாகாணத்தில் தோங்ஜி யாங் பகுதி உள்ளது. இங்கு தான் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
பிறந்த நாள் கொண்டாடுவதன் மூலம் அப்பகுதி மக்களின் நிதி ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. விழாவுக்கு வருபவர்களுக்கு வழங்கப்படும் விருந்து செலவு அதிகரிப்பு மற்றும் விழாவுக்கு வருபவர்கள் வழங்கும் பரிசு பொருளுக்கான செலவு போன்றவற்றால் இரு தரப்பினருக்கும் கஷ்டமான சூழ்நிலை உருவாகிறது. இதை கருத்தில் கொண்டே பிறந்த நாள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 70 வயதுக்கு பிறகு பிறந்த நாள் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பும், ஆதரவும் உள்ளது. பிறந்த நாள் கொண்டாடுவது அவரவர்களின் உரிமை. அதை தடுக்க கூடாது என பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.


0 Comments