Subscribe Us

header ads

மஹிந்த ஆட்சியில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் மூலம் மேலும் 500 மில்லியன் மோசடி


தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நடத்தப்பட்ட இரண்டு வருடத்தினுள் 500 மில்லியனுக்கும் அதிக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, தேசத்துக்கு மகுடம் செயலகத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி, வழக்கறிஞர் ஊடாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சரும் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முன்னாள் பிரதம செயலாளரும் தேசத்திற்கு மகுடம் திட்டமிடல் குழு தலைவருமான எஸ்.அமரசேகர, தேசத்திற்கு மகுடம் மதிப்பீடு குழுவின் தலைவரும் தொலைத் தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சின் முன்னாள் செயலாளருமான எச் எம் குணசேகர ஆகிய மூவரையே இம்மோசடியின் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளன.

அனுராதபுரம் ஒயாமடுவ மற்றும் அம்பாறை ஹார்டி கல்லூரியில் 2012 மற்றும் 2013 ஆண்டுகள் இரண்டில் இடம்பெற்ற கண்காட்சியின் போதே இவ் 500 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இக் கண்காட்சிகள் 2007ம் ஆண்டில் இருந்து 2014 வரை தொடர்ந்து நடத்தப்பட்டன.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற மற்றும் பிறந்த திகதிகளை கொண்டாடுவதற்காக அரசாங்க பணத்தை செலவிட்டு இக்கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments