Subscribe Us

header ads

5 வயது சிறுவன் வாழ்வில் ஒளியேற்றிய 3 வயது சிறுமி...



கேரளாவில் மூளைச்சாவடைந்த 3 வயது சிறுமியின் கல்லீரல் மற்றும் இரண்டு சிறுநீரகங்கள் 5 வயது சிறுவனுக்கு பொறுத்தப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கரக்குலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித். இவரது மூன்று வயது மகளான அன்ஜனா. கடந்த வியாழன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். பதறிப்போன பெற்றோர்கள் அவரை அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர்.

அன்ஜனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மூளைப்பகுதியில் பல இடங்களில் மோசமான காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். மண்ணுக்கு போகும் உடல் உறுப்புகளை மற்றவர்களுக்கு தானமாக அளிக்கலாம் என்ற மருத்துவர்களின் பரிந்துரையை ஏற்ற அன்ஜனாவின் பெற்றோர்கள் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 11 மணிக்கு உடல் உறுப்புகளை எடுப்பதற்கான அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. நீண்ட நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையில், அன்ஜனாவின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல், கருவிழித்திரை ஆகியவை எடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அன்ஜனாவின் இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவை கேரள மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது சிறுவனக்கு பொருத்தப்பட்டது.

Post a Comment

0 Comments