Subscribe Us

கட்டுரை எழுதினால் 35 ஏக்கர் பண்ணை பரிசு



அழகாக கட்டுரை எழுதத் தெரிந்திருந்தால், அமெரிக்காவில் 3 மாடி வீட்டுடன் கூடிய 35 ஏக்கர் பரப்பளவு பண்ணையை சொந்தமாக்கிக் கொள்ளலாம். வெர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்த ரான்டி சில்வர்ஸ்-கரோலின் பெர்ரி என்ற கணவன்-மனைவிதான் இந்த கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த பண்ணையின் தற்போதைய மதிப்பு ரூ.3¾ கோடி ஆகும்.          

பண்ணையைப் பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க ரூ.12 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும். அந்த வீட்டை எப்படி கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்வோம் என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் அந்த கட்டுரை மூலம் தெரிவிக்க வேண்டும். 

எவ்விதமான எழுத்துப் பிழையோ, இலக்கண பிழையோ கட்டுரையில் இருக்கக்கூடாது. அக்டோபர் 1-ந் தேதிக்குள் கட்டுரைகள் வர வேண்டும். கட்டுரைகளில், 25 கட்டுரைகளை இறுதிச்சுற்றுக்கு அந்த தம்பதியர் தேர்ந்தெடுப்பார்கள். அந்த 25 பேரில், சிறந்த கட்டுரையாளரை 3 பேர் கொண்ட தேர்வுக்குழு தேர்வு செய்யும்.          

மொத்தம் 5 ஆயிரம் கட்டுரைகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம், ரூ.6 கோடியே 30 லட்சம் வருவாய் கிடைக்கும். ஒருவேளை, எதிர்பார்த்த எண்ணிக்கையில் கட்டுரைகள் வராவிட்டால், பண்ணை வீட்டை விற்பனைக்கு கொண்டு வருவோம் என்றும், கட்டுரையாளர்களிடம் பெறப்பட்ட பணத்தை திருப்பித் தந்து விடுவோம் என்றும் கணவன்-மனைவி இருவரும் உறுதி அளித்துள்ளனர்.

Post a Comment

0 Comments