Subscribe Us

header ads

தேர்தல்: 30,000 கண்காணிப்பாளர்கள், 63,000 பொலிஸார் கடமையில்



இம்முறை தேர்தலுக்காக 30,000 பேர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இவர்களில் 130 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 

நாடுமுழுவதும் இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரோஹன ஹேட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இம்முறை தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 63,000க்கும் அதிகமான பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கு உதவ சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை அதிகாரிகள் ஆகியோரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.




தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments