Subscribe Us

header ads

26 வயது உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பூனை...


ஒரு பூனையின் ஆயுள் காலம் 12 முதல் 15 ஆண்டுகள் ஆகும்.

ஆனால் ஒரு பூனை 26 வயது வரை உயிர் வாழ்கிறது. இது அமெரிக்காவின் ஒரிகானில் உள்ளது. 'கார்டூராஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பூனையை ஆஸ்லி ரீட் ஒகுரா என்ற பெண் வளர்த்து வருகிறார்.

இப்பூனை கடந்த 1989–ம் ஆண்டு ஆகஸ்டு 1–ந்தேதி பிறந்தது. தற்போது இதற்கு 26 வயது ஆகிறது. இதன் மூலம் உலகிலேயே அதிக நாள் வாழும் பூனை என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த 2014–ம் ஆண்டு அதிக நாள் வாழும் பூனை என கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பெற்றது. ஆனால் டிபானி என்ற பூனை 27 ஆண்டுகள் 2 மாதம் 20 நாட்கள் உயிர் வாழ்வதாக உரிய ஆவணத்துடன் சமர்ப்பித்தனர். அதன் மூலம் ‘கார்டுராய்’ பூனையின் கின்னஸ் சாதனை பட்டம் பறி போனது.

இப்பூனை சமீபத்தில் இறந்து விட்டது. அதை தொடர்ந்து தற்போது 'கார்டுராஸ் பூனை' 2–வது தடவையாக இப்பட்டத்தை வென்றுள்ளது.

தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments