Subscribe Us

மேற்கு வங்காளத்தில் வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 132 ஆக உயர்வு: 52 லட்சம் பேர் பாதிப்பு



மேற்கு வங்காளத்தில் கனமழை காரணமாக சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு மேலும் 7 பேர் பலியானதையடுத்து, இதுவரை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. 

மேற்கு வங்கத்தில் தெற்கு 24-பர்கானாஸ், வடக்கு 24-பர்கானாஸ், முர்ஷீதாபாத், பாங்குரா, நாடியா உள்ளிட்ட 12 மாவட்டங்கள், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் மூழ்கியும், மின்னல் தாக்கியும், வீடு இடிந்தும் பலர் பலியாகியுள்ளனர். 

12 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 2,213 தாற்காலிக முகாம்களில் 3.63 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சுமார் 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளன. சுமார் 5 லட்சம் ஹெக்டேர் அளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

இந்நிலையில், இன்று பிரதமரை சந்திக்க உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அவரிடம் மாநிலத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள இருக்கும் மீட்பு, மற்றும் மறு கட்டுமான பணிகளுக்காக 21 ஆயிரம் கோடி நிதி கோரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments