Subscribe Us

header ads

முதன்முறையாக ஒரே நாளில் 100 கோடி பேர் பேஸ்புக்கில் மூழ்கினர்: மார்க் ஜுக்கர்பெர்க் பெருமிதம்



உங்களுக்கு ரேஷன் கார்டு உள்ளதா? வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறதா? வருமான வரித்துறையின் பேன்கார்டு இருக்கிறதா? ஐ.சி.ஐ.சி.ஐ., ஸ்டான்டர்ட் சார்ட்டர்ட் போன்ற வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளீர்களா? போன்ற பொதுக் கேள்விகளின் மூலம் ஒருவரது வாழ்க்கை நிலை, சமூக அந்தஸ்து போன்றவை எல்லாம் மதிப்பிடப்பட்டு வந்த காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது.

இப்போது, ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, உங்களுக்கு பேஸ்புக் அக்கவுண்ட் உள்ளதா? என்ற பொதுக் கேள்வியும், ‘ஆம், உள்ளது’ என்று பெரும்பான்மையானவர்கள் பதிலளிப்பதும்தான் சமூக கவுரவமாக கருதப்படுகின்றது.

மார்க் ஜூக்கர்பெர்க் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டாக தொடங்கிய ‘பேஸ்புக்’ இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் செலவே இல்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், நட்புகளை புதுப்பித்துக் கொள்ளவும் உதவிடும் அரிய சாதனங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது,

உலகளாவிய அளவில், சுமார் 150 கோடி மக்கள் மாதத்துக்கு ஒருமுறையாவது பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைவதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு மாதமும் பேஸ்புக்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கண்காணித்துவரும் பேஸ்புக் நிறுவனம், இதுதொடர்பான தகவல்களை தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையில் தவறாமல் குறிப்பிட்டு வருகின்றது.

அவ்வகையில், கடந்த ஜூன் மாதம் 968 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தமாத நிலவரப்படி கடந்த திங்கட்கிழமை (23-ம் தேதி) மட்டும் ஒரு பில்லியன் (நூறு கோடி) மக்கள் பேஸ்புக்கை பயன்படுத்தியதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம், பூமியில் உள்ள மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கினர் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தியதாக தனது பக்கத்தில் அவர் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments