மது கணனியின் இயங்குதளத்தில் ஏற்படும் ஏராளமான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வு குறிப்பிட்ட இயங்குதளத்தினை மீள நிறுவுவதே ஆகும்.
அவ்வாறு மீள நிறுவுவதற்கு நாம் DVD இறுவட்டுக்களை பயன்படுத்தினாலும் அதற்கு பதிலாக எமது USB Flash Driveசாதனங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதனால் என்ன பயன்.
- உங்கள் கணனியில் உள்ள CD/DVD Rom இயங்காத சந்தர்பத்தில் இந்த வழிமுறையை பயன்படுத்தி இயங்குதளத்தை மீள நிறுவிக்கொள்ளலாம்.
- DVD இறுவட்டுக்கள் பழுதடைந்ததாக இருப்பின் அதன் மூலம் நிறுவும் போது ஏற்படும் தடைகள் USB Flash Drive சாதனங்கள் மூலம் நிறுவும் போது ஏற்படுவதில்லை.
- DVD இறுவட்டுக்களை போல் பேணி பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை மாறாக தேவையான நேரத்தில் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம்.
எனவே நீங்களும் DVD இறுவட்டுக்களுக்கு பதிலாக USB Flash Drive சாதனங்களை பயன்படுத்த விரும்பினால் பின்வருவரும் வழிமுறைகளை பின்பற்றுக.
உங்களுக்குத் தேவையானவை.
1. USB Flash Drive சாதனம் (8 GB அல்லது அதற்கு மேற்பட்டவைகள் விரும்பத்தக்கது)
2. நீங்கள் உங்கள் கணனிக்கு நிறுவ இருக்கும் இயங்குதளத்தின் ISO கோப்பு. இதனை பின்வரும் இணைப்புகள் மூலம் Microsoft தளத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.
Window 7 Ultimate
- Download ===> Windows 7 32-bit Ultimate x86 English (2.4 GB)
- Download ===> Windows 7 64-bit Ultimate x64 English (3.1 GB)
குறிப்பு: உங்கள் கணனி 64-Bit இற்கு ஆதரவு அளிக்கும் என உறுதியாக தெரிந்தால் மாத்திரம் இரண்டாவது இணைப்பு மூலம் தரவிறக்குக இல்லையெனில் முதலாவது இணைப்பினையே தெரிவு செய்க.
Windows 8.1 Pro
- Download ===> Windows 8.1 Pro 32-bit And 64-bit (2.7 GB), (3.6 GB)
3. ISO கோப்பினை USB Flash Drive சாதனத்தில் உள்ளிடுவதற்கான மென்பொருள்.
இதனை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கிக்கொள்ளலாம்.
- Download Windows 7 USB/DVD Download Tool
மேலும் இதனையும் பார்க்க: Windows கணனியில் Right Click செய்து பெறப்படும் Context Menu இல் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை சேர்க்க உதவும் இலவச மென்பொருள்
- இனி மேற்குறிப்பிட்ட இணைப்பில் இருக்கும் Windows 7 USB/DVD Download Tool ஐ தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்க.
- பின் அந்த மென்பொருளை திறந்து Browse என்பதனை சுட்டுவதன் மூலம் நீங்கள் தரவிறக்கிய ISO கோப்பினை தெரிவு செய்க.

- பிறகு Next என்பதை அழுத்தி USB Device என்பதனை தெரிவு செய்க.

- பின் உங்கள் கணனியில் இணைக்கப்பட்டிருக்கும் USB Flash Drive ஐ தெரிவு செய்து Begin Copying என்பதனை அழுத்துவதன் மூலம் மிக இலகுவாக Bootable USB Flash Drive ஐ உருவாக்கிக்கொள்ளலாம்.

- இனி அதனை DVD இருவட்டுக்களுக்கு பதிலாக பயன்படுத்தி உங்கள் கணணியை Format செய்துகொள்ள முடியும்.
குறிப்பு: மேலே தரப்பட்டுள்ள இயங்குதளங்களுக்கான ISO கோப்புக்கள் உத்தியோகபூர்வ இணைப்புக்கள் ஆகும். எனவே இதில் Windows 7 இயங்குதளத்தை 30 நாட்களுக்கும் Windows 8.1 இயங்குதளத்தை 90 நாட்களுக்கும் மாத்திரமே இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் இருப்பினும் இந்த சோதனை காலத்தினை நீடித்துக்கொள்ளவும் முடியும். சோதனை காலத்தை எவ்வாறு நீடித்துக்கொள்ளலாம் என்பதை அறிய பின்வரும் பதிவினை பார்க்க

0 Comments