-VILUTHU PUTTALAM-
விழுதின் திட்டக்கிராமமான புதிய எலுவன்குளம் கிராமத்திலுள்ள அமரா மற்றும் மகளிர் சங்க அங்கத்தவர்களிற்கு குட்டி அரசாங்க கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதையடுத்து எலுவன்குளம் அமரா அங்கத்தவர்களும் மகளிர் சங்க அங்கத்தவர்களும் இணைந்து கிராம அபிவிருத்தி குழுவாக தம்மை உருவாக்கி செயற்பட்டுவந்தனர்.
இவர்கள் தமது கிராமத்திலுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்திசெய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வாறு அவர்கள் தமது கிராமத்தில் மலசல கூட வசதிகள் அற்றோர்,நிரந்தர இருப்பிடங்கள் அற்றோரின் தரவுகளை ஆராய்ந்து 23 அங்கத்தவர்களில் குறிப்பாக தலைமை தாங்கும் குடும்பப்பெண்களது விபரங்களும் அடங்கிய பெயர் பட்டியல் ஒன்றினை அரசசார்பற்ற நிறுவனமான பிரஜாதிரிய அமைப்பின் தலைவராக கடமையாற்றும் கௌரவ புத்தியாகம தேரர் அவர்களிடம் கையளித்தனர் .
இதனையடுத்து பெயர் பட்டியலில் உள்ள 10 அங்கத்தவர்கள் மலசல கூட நிதித்திட்டத்திற்கு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.




0 Comments