அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களுக்கு...!
கடந்த 13 வருடங்களாக அமைச்சராக இருக்கும் உங்களால் உங்களுடைய சொந்த மாவட்டத்திலுள்ள வில்பத்து பிரச்சினைக்கு இன்னும் தீர்வினைக் காண வக்கற்ற நிலையில் அதை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை உசுப்பேற்றி அரசியல் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறீர்கள். இந்த இலட்சணத்தில் உங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாத கல்முனைக் கரையோர மாவட்டத்தை பெற்றுக்கொடுக்கப் போவதாக வெறும் வாய்ச்சவாடல் விடுவது உங்களின் அரசியல் போக்கிரித் தனத்தை மிகத்தெளிவாக படம்;பிடித்துக் காட்டுகிறது.
அடுத்தவனுடைய முரசை மோர்ந்து பார்ப்பதற்கு முதல் உங்களுடைய பல்லைத் துலக்க வழிபாருங்கள்;. கல்முனை கரையோர மாவட்டத்தை பெற்றெடுப்பதற்கு அந்த மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் அங்கே இருக்கிறார்கள். அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்களால் முடிந்தால் “ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன் வில்பத்து பிரச்சினைக்கு தீர்வினைப்பெற்றுக் கொடுப்பேன்” என பகிரங்கமாக உறுதியளிக்க முடியுமா? என சவால் விடுகிறோம்.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தைக்கூட உங்களது கட்சியினால் வெல்ல முடியாது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டு, எமது கட்சி இரண்டு ஆசனங்களை வென்றெடுத்தால் ரணில் விக்ரமசிங்க பிரதமர் ஆசனத்தில் அமர்வதற்கு முன் கரையோர மாவட்டத்தை பெற்றுத்தருவேன் என நீங்கள் கூறிய நகைச்சுவை உங்களை வடிவேல் போன்ற காமடியனாகவே மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியிருக்கிறது.
எனவே இதற்குப் பிறகும் நீங்கள் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாத கரையோர மாவட்டம் தொடர்பாக பேசுவதை நிறுத்திவிட்டு ஒவ்வொரு தேர்தலிலும் உங்களுக்கு வாக்குப்பிச்சை போட்டுக்கொண்டிருக்கும் நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்ட மக்களுடைய வில்பத்துப் பிரச்சினைக்கும், இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் வீடு மற்றும் காணிப்பிரச்சினைகளுக்கும், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண முயற்சிக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.
தென்கிழக்கு இளைஞர் பேரவை
கல்முனை.
30.07.2015


0 Comments