Subscribe Us

header ads

ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பில்கவரபட்டு உக்ரைன் நாட்டை பொறுத்தவரை மாற்று மதத்தவர் அதிக அளவில் இஸ்லாத்தை தழுவும் மாதமாக மாறியுள்ளது





குர்ஆனின் மாதமான ரமளான் உக்கரைன் நாட்டை பொறுத்தவரை இஸ்லாத்தை தழுவும் மாதமாக மாறியுள்ளது ரமாளான் ஆரம்பித்ததில் இருந்து இன்று வரையிலும் 50 க்கும் அதிகமான மாற்று மதத்தவர் இஸ்லாத்தில் இணைந்ததாக உக்ரைன் இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்தார்

50 பேர் இஸ்லாத்தை தழுவியது என்பது நான் நிறுவகிக்கும் ஒரு இஸ்லாமிய மையத்தின் மூலம் கிடைத்துள்ள விபரமாகும் இது போன்று பல மையங்கள் உக்ரைனில் செயல் பட்டு வருகிறது


அது போல் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக இஸ்லாத்தை பிரகடனம் செய்பவர்கள் தான் இந்த புள்ளி விபரங்களில் கணக்கிட படுகின்றனர்

இது அல்லாது பல்வேறு இடங்களில் தமது அருகில் உள்ள நண்பர்கள் உறவினர்கள் மூலம் பலர்கள் இஸ்லாத்தை தழுவி கொள்கின்றனர் அவர்கள் இந்த கணக்குகளுக்குள் வருவதில்லை

எனவே புள்ளி விபரம் என்பது 50 என்று சொன்லும் உண்மை அதை விட அதிகமாகும் என இஸ்லாமிய மையத்தின் பொறுப்பாளர் இஸ்மாயில் தெரிவித்துள்ளார் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு தன்னை .இஸ்லாத்தில் இணைத்து கொண்ட உக்ரைன் நாட்டு ஆய்வாளர் ஆர்த்தர்


ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் கடைபிடிக்கும் நோன்பின் அமைப்பினால் கவரபட்டு உக்ரைன் நாட்டை சார்ந்த ஆர்த்தர் என்ற இளைஞர் தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

இது பற்றி அவர் கூறும் போது


நான் பல்வேறு மதங்களை பற்றி ஆய்வு செய்தேன் நான் ஆய்வுக்கு எடுத்து கொண்ட மதங்களில் இஸ்லாமும் ஒன்றாக இருந்தது

இஸ்லாத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களை இஸ்லாம் அல்லாத மதங்களோடு நான் ஒப்பிட்டு பார்த்த போது இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை என்னால் உணர முடிந்தது

அதுவும் ரமாளான் நோன்பு என்பது மனித சமூகத்தை தவறான உணர்வுகளில் இருந்தும் தவறான சிந்தனைகளில் இருந்தும் விலக்கி நிறுத்தும் ஒரு அர்புத செயலாக அமைந்துள்ளதையும் முஸ்லிம்கள் நோன்பு வைக்கும் போது அவர்களது ஒவ்வொரு உறுப்புகளும் தவறான செயலில் இருந்து விலகி இருப்பதையும் நான் உணர்ந்து கொண்ட போது இஸ்லாத்தை தழுவுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை

அது போல் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வு ரீதியாக ஒரு சர்வதேச ஒருங்கிணைப்பு இருப்பதையும் என்னால் உணரமுடிந்தது

முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் இடையே ஒரு ஒன்றுபட்ட மொழி இல்லைஎன்றாலும் அவர்கள் முஸ்லிம் என்ற உணர்வால் ஒன்று பட்டு நிர்பதை நான் உணர்ந்து கொண்ட போது உலகில் இஸ்லாத்திர்கு மாற்றாக எந்த மதமும் இல்லை என்பதை நான் உணர்ந்து கொண்டு என்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். 

நன்றி :சையதுஅலி பைஜி 

Post a Comment

0 Comments