தொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், தொழில்முறையிலான தொடர்புகளையும் விரிவடையச் செய்துகொண்டே போகும் அதேவேளையில் மக்களை மிக நெருக்கமாகவும் கொண்டுவர உதவியுள்ளன.
இந்த தொழில்நுட்பப் புரட்சியில் ஒருபடி மேலே சென்று முன்னர் வெறும் குறுந்தகவலை மட்டும் பரிமாறும் நோக்கத்தில் யாஹூ மெஸெஞ்சர் என்ற செயலியை வெளியிட்ட யாஹூ நிறுவனம், தற்போது ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ என்ற வீடியோ மெஸெஞ்சரை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்மூலம், வாடிக்கையான டெக்ஸ்ட் மெஸேஜை அனுப்புவதுடன் நமது வீடியோவையும் அதே நேரத்தில் அனுப்பலாம். நமது மெஸேஜுக்கு எதிர்முனையில் இருப்பவரின் ‘ரியாக்ஷன்’ என்ன? என்பதையும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். ஆனால், இந்த வீடியோவில் நமது குரல் பதிவு இருக்காது.
தற்போது, ஹாங்காங் நகரில் உள்ள ஐடியூன் ஆப்ஸ் கடைகளில் மட்டும் விறபனையாகும் இந்த ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ வெகு விரைவில் இந்தியாவிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம், வைஃபை வசதியுடன் கூடிய சராசரி கம்ப்யூட்டர் மற்றும் நவீன கைபேசிகளில் இந்த ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்து, நமக்கு விருப்பமான நபருடன் வீடியோ மூலம் எந்நேரமும் தொடர்பில் இணைந்திருக்கலாம்.
நமது கைபேசியில் இந்த வசதியை ஏற்படுத்தி கொண்ட பிறகு நம்முடன் தொடர்பில் உள்ளவர்களில் யார்யாரெல்லாம் ’யாஹூ லைவ் டெக்ஸ்ட்’ செயலியை பயன்படுத்துகிறார்களோ.., (வாட்ஸ்அப்பில் உள்ளது போல்) அவர்களுடன் நீங்கள் (ஓசையில்லாமல்) வீடியோ டெக்ஸ்ட் செய்து மகிழலாம்.
தற்போது, ஒருவரோடு ஒருவர் மட்டும் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த செயலி செயல்பட்டு வருகிறது. இருவருக்கு மேற்பட்ட ‘குரூப் சாட்டிங்’ வசதி இதில் இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.


0 Comments