மஹிந்த ராஜபக்ஷவை அரசியலில் பலிக்கடாவாக்கி வாசு, தினேஷ், விமல், கம்மன்பில பாராளுமன்றம் வரமுயற்சிப்பதோடு மோசடிக்காரர்கள் விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டும் சிறுவர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக, குற்றவாளிகளுக்கு அடைக்களம் கொடுத்ததாக சுயவிமர்சனம் செய்யும் மஹிந்த மீண்டும் அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
பிட்டகோட்டே சிறிகொத்தாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக இவ்வாறு தெரிவித்தார்.


0 Comments