Subscribe Us

header ads

மகிந்தவுக்கு வெட்கமில்லையா?: வசந்த சேனாநாயக்க கேள்வி


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொலன்நறுவைக்கு வர இடமளிக்க போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் அந்த மாவட்ட வேட்பாளர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக முயற்சிக்கின்றார். வெட்கமில்லையா?.

வரலாற்றில் என்றும் நடைபெறாத வகையில், எதிர்க்கட்சியின் பின் வரிசை ஆசனத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக அமர முன்னாள் ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா?.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன முதல் சந்திரிக்கா குமாரதுங்க வரை ஜனாதிபதி பதவியின் கௌரவத்தை பாதுகாத்தனர் என வசந்த சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments