முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நம்ப முடியாது என கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்த போதே செய்ய வேண்டிய முக்கியமான அரசியல் சீர் திருத்தங்கள் எதனையும் மஹிந்த செய்யவில்லை.
இந்த அரசியல் மாற்றங்களை செய்யுமாறு மந்திரம் உச்சரிப்பது போன்று மஹிந்தவின் பல தடவைகள் உரைத்த போதிலும் அதனை அவர் பொருட்படுத்தவில்லை.
அதன் காரணமாகவே பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை கொண்டு வர நேர்ந்தது.
தற்போது நாட்டில் நிலவி வரும் ஊழல் மோசடி மிக்க தேர்தல் முறைமையில் மாற்றம் செய்ய வேண்டும்.
இதற்கு தற்போதைய பொதுத் தேர்தல் ஓர் சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.
நிலையான அரசாங்கமொன்றை அமைத்து அதன் ஊடாக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதனை மக்களுக்கு தெளிவுபடுத்த உள்ளோம்.
சுதந்திரம் கிடைத்தது முதல் நாம் பிழையான பாதையிலேயே நாம் செல்கின்றோம்.
இதுவரையில் நாம் நபர்களை பதவியில் அமர்த்துவதனையே செய்து வந்தோம்.
இம்முறை மக்களின் கொள்கைகளை ஆட்சிப்பீடம் ஏற்ற வேண்டுமென சோபித தேரர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


0 Comments