இரவில் வானைப் பார்க்கும் பழக்கம் உள்ளதா? அப்படி இல்லாவிட்டால் இன்று இரவு
7 மணிக்கு மேல் வானத்தைப் போய்ப் பாருங்கள். அங்கே இரண்டு கிரகங்கள்
அருகருகே நெருங்கி நிற்பதைப் பார்த்து அதிசயுங்கள். ஆம், வியாழன் கிரகமும்,
வெள்ளி கிரகமும் அருகருகே நெருங்கி நிற்கும் அதிசய நிகழ்வு வானில் கடந்த 3
நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. எத்தனை பேர் இதைப் பார்த்திருப்பார்கள்
என்று தெரியவில்லை.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர்
பி.அய்யம்பெருமாள் கூறுகையில்...
இரவில் வானத்தின் வடகிழக்கில் வெள்ளிக்கிரகமும் வியாழக்கிரகமும் அருகருகே
தெரிகின்றன. வெள்ளிக் கிரகம் மிகவும் பிரகாசமாக காட்சி அளிக்கிறது.
வெள்ளியானது பூமியில் இருந்து 10 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆனால் வியாழன் 74 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
இரு கிரகங்களும் பூமியை சுற்றி வருகின்றன. வியாழன் விரைவில் பூமியை
சுற்றிவிடும். ஆனால் வெள்ளி சுற்றி வருவதற்கு வருடக்கணக்கில் ஆகும்.
அவ்வாறு வெள்ளிக்கிரகம் சுற்றும் போது அது வியாழன் அருகே வருகிறது.
அவ்வாறு வரும்போது வெள்ளிக்கிரகமும் வியாழக்கிரகமும் அருகருகே தெரியும்.
இந்த காட்சி வருடத்திற்கு 5 அல்லது 6 நாட்கள்தான் தெரியும்.
இந்த வருடம் இரு கிரகங்களும் அருகருகே தெரியும் காட்சி ஜூன் 30ம் தேதி
தொடங்கியது. தினமும் இரவில் 7 மணிமுதல் 8-15 மணிவரை அந்த காட்சியை காணலாம்.
4 ம் தேதி இரவு வரை இரண்டையும் அருகருகே பார்க்கலாம் என்றார்.
மறக்காமல் இன்று இரவு மொட்டை மாடிக்குப் போங்க.. இரு கிரகங்களையும்
தரிசியுங்கள்......!
-DAY TAMIL-


0 Comments