Subscribe Us

header ads

மெக்டோனால்ட் உணவகத்தின் வெளிச்சத்தில் வீட்டுப்பாடம் செய்த சிறுவன்



பிலிப்பைன்ஸ் நாட்டின் செபு நகரில் வசிக்கும் ஜோய்ஸ் டோரெபிரான்க்கா என்னும் மருத்துவ கல்லூரி மாணவன் சமீபத்தில் அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரல் ஆனது.

செபு நகரில் ஒரு மெக்டோனல்ட் உணவகத்தின் வெளிச்சத்தில் முட்டிபோட்டு வீட்டுப்பாடம் செய்த சிறுவனை பார்த்தவருக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. இந்த நிலையை படம் பிடித்து அவரின் பேஸ்புக் பக்கத்தில் ’என்னை பாதித்த சிறுவன்’ என்ற பெயரில் வெளியிட்டார். இதைப் பார்த்த பலரும் திரும்பத்திரும்ப ஷேர் செய்த்ததில் பலர் அந்த சிறுவனைத் தேடி அவனுக்கு உதவ முன்வந்தனர்.

டேனியல் கப்ரேரா என்ற அந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனின் அப்பா இறந்துபோய்விட்டார். ஒரு தீ விபத்தில் அவன் வசித்த வீடு எரிந்து சாம்பலானதிலிருந்து அவனுக்கு நிரந்தரமான இருப்பிடமும் இல்லை. அம்மாவுடன் வசித்துவரும் டேனியலின் உடன்பிறந்தவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளது.

குடும்ப சூழ்நிலையை உணர்ந்த அவன் பள்ளியில் நன்றாக படித்து வருகிறான். நன்றாக படித்தால்தான் குடும்பத்தின் நிலையை சரிசெய்ய முடியும் என்று அவன் நம்புகிறான். மெக்டோனால்ட் கடை வெளிச்சம் நிலையாக இருப்பதால் அங்கே வீட்டுபாடம் செய்ய சென்றதாக அவன் கூறினான்.

ஜோய்ஸ் இதுபற்றி கூறுகையில், ’நாங்கள் படிப்பதற்கு சில சமயங்களில் காபி ஷாப்புகளுக்கு போவது உண்டு, ஆனால் டேனியலின் கடும் உழைப்பு என்னை கண்கலங்க வைத்தது’ என்றார். 

டேனியலுக்கு பெரியவனாகி ஒரு போலீஸ்காரன் ஆக வேண்டுமாம். அவன் தனது கனவை அடைய பல்வேறு தரப்பினரும் அவன் படிப்பதற்கு பணம் மற்றும் பொருள் கொடுத்து உதவி வருகின்றனர்.

பேஸ்புக்கில் ஷேர் செய்த போட்டோவுக்கு இப்படி ஒரு மதிப்பா? என அவனது தாயார் மெய்சிலிர்க்கிறார்.


Post a Comment

0 Comments