சவுதியின் ரியாத் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பை சொந்த இடமாகக் கொண்ட 28 வயதுடைய ரிஷ்வான் முஹம்மட் ஹில்மி என்ற விற்பனையாளராக தொழில் புரிந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞர் தனது காரை வேகமாக செலுத்திச் சென்று எதிரே வந்த மற்றுமொரு காருடன் மேதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
எனினும் மற்றைய கார் சாரதி சிறு காயங்களுடன் உயிர்தப்பியுள்ளதுடன் அவரும் ஒரு ஆசியநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 Comments