Subscribe Us

header ads

ஊருக்கு எம்பி வேண்டுமென்பது வெறும் பெயரளவில் ஒருவரை பாராளமன்றம் அனுப்பி விட்டு பின் கைசேதப்பட்டு கண்ணீர் விடுவதற்கல்ல.

-Athambawa Waaqir Hussaien-


இரண்டு முறை அதாவது பன்னிரண்டு வருடங்கள் ஒருவரை பாராளமன்றம் அனுப்பி பெற முடியாதவற்றை இன்னுமொரு மேலதிக ஆறு வருடம் அனுப்பி பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புவது,நம்மை நாமே முட்டாள் என்று ஒத்துக்கொள்வதற்கு சமம்.

ஊருக்கு எம்பி வேண்டுமென்பது வெறும் பெயரளவில் ஒருவரை பாராளமன்றம் அனுப்பி விட்டு பின் கைசேதப்பட்டு கண்ணீர் விடுவதற்கல்ல.

எமக்கான பாராளமன்ற பிரதிநிதித்துவம் என்பது எமது சமூகத்தின்,எமது ஊர் சார்பான ஒரு சர்வதேச அடையாளமே,இப்படிப்பட்ட ஒரு சமூக அடையாளம் நிச்சயம் பன்முகப்படுத்தப்பட்டு ஒரு சிறந்த தெரிவாகவே அதிலும் தீர்கமான ஒருவரின் தெரிவின் மூலமே பூரணப்படுத்தப்படும் என்பது பொதுவான கணிப்பீடு.

இதுவரை காலமும் இது போன்ற ஒரு கவனமும் இல்லாமல் எமதூருக்கு பாராளமன்ற பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கோசம் கிடைக்கப்பெற்று வந்தாலும் அந்த இடத்தை நாம் தக்க வைத்துக்கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தையும் நாம் உணராமல் இல்லை ஆனால் ஒரே பிரதிநிதியை தொடர்ச்சியாய் தெரிவு செய்வதன் மூலம் ஒரு சர்வாதிகார உள்ளூர் ஆட்சி முறைக்கு நாமே வழி ஏற்படுத்தி கொடுக்கும் ஆபத்தையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல் எமதூரில் இப்பதவியை அலங்கரிக்க வேறொரு தகுதி உள்ள எவருமே இல்லையா என்ற கேள்விக்கும் கேலிக்கும் நாம் உள்ளாகவேண்டிய சந்தர்பங்கள் பற்றியும் நாம் சற்று கரிசனை எடுக்கவேண்டும்.

இந்த நிலையில், எமதூரில் ஏற்கனவே இருமுறை பாராளமன்ற கதிரையை அலங்கரித்தவகள் தமது நிலை மற்றும் ஊரின் நிலைப்பாட்டை அறிந்து இன்றைய இளம் எதிர்கால சமூகத்திற்கு வழிவிட வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு என்றே நான் கருதுகின்றேன். இது அவர்களின் அரசியல் அனுபவத்தையும் தாண்டி ஒரு தேர்ந்த அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தும்.

இதனடிப்படையில், இப்போது நிந்தவூர் சமகால அரசியலில், அரசியல் வாதிகள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ மாற்றம் ஒன்று தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். அது மட்டுமல்ல அந்த மாற்றம் முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை பாதிக்காத வகையிலேயே இருக்கவும் வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்தும் இருக்கின்றனர். இந்த மாற்றத்திற்கான சரியான தருணமாகவே எதிர்வரும் தேர்தலை நான் நோக்குகின்றேன். இந்த தேர்தலில் நிந்தவூரை பொறுத்தவரை ஒரு அரசியல் அதிகார மாற்றத்தின் புதிய வடிவம் ஒன்றின் அவசியத்தை நாம் பகிரங்கப்படுத்த வேண்டிய கட்டாயம் எம் எல்லோருக்கும் உண்டு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதனடிப்படையில், எதிர்வரும் பாராளமன்ற தேர்தலில் ஒரு புது முகத்தை அதுவும் முஸ்லிம் காங்கிரஸ் இல் இருந்தே அறிமுகப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் எமது சகல ஆகக்குறைந்த எதிர்பார்பையாவது பூர்த்தி செய்பவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவராக நான் மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனை பார்கின்றேன்.

இது எனது கருத்து என்பதற்கப்பால் ஊரில் உள்ள பலரின் விருப்பாக கூட இருக்க முடியும். இது பற்றி பொது மக்களின் கருத்துக்கள் உச்ச அளவில் வரவேட்கப்படுகின்றது.அது மட்டுமல்ல இந்த கோரிக்கையை ஒரு மிகப்பெரும் அழுத்தம் ஒன்றின் மூலம் உரிய கட்சிக்கும் அதன் தலைமைக்கும் தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு, நல்லாட்சி மற்றும் மாற்றம் வேண்டி நிற்கும் சகல நிந்தவூர் மக்களுக்குமுரிய கடமையாகும் என்றே நான் கருதுகின்றேன்.
இன்ஷா அல்லாஹ் மாற்றம் வேண்டிய கோரிக்கை தொடரும்.

Post a Comment

0 Comments