Subscribe Us

header ads

தேர்தல் காலத்தில் ஏன் இந்த இழி நிலை

-Waaqir Hussain-


தேர்தல் காலம் என்பதால் எம்மில் பலர் அரசியல் கருத்து அல்லது விமர்சனம் என்ற போர்வையில் எழுதும் சில அநாகரீகமான பதிவுகளை பார்க்கும் போது, எந்த அளவுக்கு நாம் அரசியல் மயப்படுத்தலில் அதள பாதாளத்தில் இருக்கின்றோம் என்பதை கண்டு கொள்ள முடியும்.

அரசியல் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அல்லது நபர்களின் கொள்கைகளை முன்னிறுத்தி மக்கள் முன் அதிகார அந்தஸ்தை வேண்டி நிற்பதாகவே கூற முடியும். இந்த நிலையில் நாம் எமக்கு முன் உள்ள கட்சிகள் அல்லது நபர்களின் கொள்கைகளை அல்லது அவர்களின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளை முன்னிறுத்தியே அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியும்.

ஆனால் இப்போது எம்மக்களிடையே இடம்பெறுவது என்ன? வெறும் மேலோட்டமான கருத்துக்களுடன் தமக்கு சார்பில்லாத அல்லது ஒத்துப்போகாத கட்சியை அல்லது அக்கட்சிகளில் உள்ள நபர்களை வசை பாடுதல் அல்லது அவர்களின் குறைகள் அல்லது அவர்கள் மீது இட்டுக்கட்டல் அல்லது தூற்றுதல் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்று விமர்சிப்பதன் மூலம் திருப்திப்பட்டுக்கொள்கின்றனர்.சில நேரம் இதுதான் அரசியல் விமர்சனம் அல்லது கருத்து கூறல் என்று தற்பெருமையும் அடைந்து தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றனர்.

இது மிகவும் ஆபத்தான ஒரு அரசியல் தெளிவாகும். பிற சமூக அரசியல் ஆர்வலர்கள் தங்களுக்குள்ளே கொள்கை அளவிலும், அபிவிருத்தி மட்டத்தில் மட்டுமே முரண்பட்டு கருத்துக்கள் பரிமாறி ஒரு பண்பட்ட அரசியல் செயற்பாட்டை வெளிக்காட்டும்போது எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வசைபாடல் என்பதோடு மட்டுமே தம்மை மட்டுப்படுத்தி அரசியல் பேசுவது, எமது அரசியல் எமக்கு கொண்டுவந்ததெல்லாம் மிகவும் கீழ்த்தரமான, பண்பாடற்ற கொள்கைகள் என்றால் அது மிகையாகாது.

நாம் எல்லோரும் எதோ ஒரு வகையில், யாரோ ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகத்தான் உள்ளோம். அந்த ஆதரவை நாம் உறுதிப்படுத்த அடுத்த கட்சி ஆதரவாலனுடன் கொள்கை ரீதியாக தர்கியுங்கள். அதை விடுத்து மிகவும் கேவலமான முறையில் தகாத வார்த்தை மற்றும் கருத்துக்கள் மூலம் வார்த்தைகளை பரிமாறுவதன் மூலம், இலங்கை முஸ்லிம் அரசியல் என்பது அசிங்கம் நிறைந்த ஆதரவாளர்களை கொண்டுள்ள பண்பாடற்ற ஒரு சாக்கடை என்று பிறர் இகழ வகை செய்து விடாதீர்கள்.

எமக்கு அரசியல் ஒன்றும் ஈருலகை வெற்றி கொள்ள வந்த மதமுமல்ல, மார்கமுமல்ல.

Post a Comment

0 Comments