Subscribe Us

header ads

ஐ.தே.க வேட்பாளர் பட்டியல் ரணிலிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் வேட்பு மனுச் சபையினால் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வேட்பு மனுக்களில் மாவட்ட ரீதியில் வேட்பாளர்கள் கையொப்பமிட்டதன் பின்னர் வேட்பு மனு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் மற்றும் 13ம் திகதிகளில் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

எவ்வித குற்றச்சாட்டுக்களும் அற்ற சிறந்த வெற்றியீட்டக் கூடியவர்களை தெரிவு செய்யுமாறு ரணில் பணிப்புரை விடுத்துள்ளார்.

வேட்பு மனுக்களை பிரதமர் மாவட்டத் தலைவர்களிடம் ஒப்படைப்பார் எனவும் அதன் பின்னர் அவை தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments