Subscribe Us

header ads

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகாலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. 
இதில் சென்னை அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் அணியின் ராஜ் குந்த்ரா ஆகிய இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். 6 ஆவது கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்டதாக சென்னை அணியின் நிர்வாகத் தலைவர் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி உரிமையாளர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் குறித்த வழக்கை விசாரணை செய்த இந்திய உச்ச நீதிமன்றம், முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்தது.
மேலும், குருநாத் மெய்யப்பனின் மாமனார் என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபையில் எந்தவிதமான பதவியையும் வகிக்கக் கூடாது என்றும், சூதாட்டம் தொடர்பாக விசாரணைக் குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் என்.சீனிவாசன் இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு சபையின் தலைவர் பதவியை இழந்தார்.
இந்நிலையில் லோதா தலைமையிலான விசாரணைக் குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் சூதாட்டப் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 
லோதா குழுவின் அறிக்கையில் இன்று கூறப்பட்டதாவது:
குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரியாகச் செயல்பட்டார். அவர் பலமுறை சூதாட்டத்தில் ஈடுபட்டார். இந்திய சட்டப்படி சூதாட்டம் மிகப்பெரிய குற்றம்.
குந்த்ரா மீது சூதாட்டப் புகார் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரபலமான சூதாட்டத் தரகர் மூலமாக குந்த்ரா அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபட்டார்.
இதேவேளை ராஜஸ்தான் அணி வீரர்களும் சூதாட்டத்தில் ஈடுபட்டமை உறுதியாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments