Subscribe Us

header ads

ஹிஜாபை இழக்க மறுத்த பெண்ணின் இன்றைய நிலை...

இது உண்மை சம்பவம்  நான் பார்த்து உணர்ந்து வியந்த  சம்பவம் …

இருபதாண்டுகளுக்கு முன் வசதியாய் வாழ்ந்த குடும்பம் சூழ்நிலை அகதியாய் மாறி தலைநகரில் குடிசையை விட வசதி குறைந்த குடில் ஒன்றில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ள பட்டது அந்த குடும்பம்

அந்த குடிலுக்கு வாடகை கொடுக்க கூட வசதியற்ற நிலை
சொந்த தொழில் நடத்திய தந்தை சுமாரான வருமானத்திற்கு கூட சிரமபட்டார் ஆண் , பெண் என இரண்டு குழந்தைகள் . இரண்டு குழந்தைகளில் பெண் குழந்தை படிப்பில் கெட்டிகாரி

குடில்வாழ்க்கை மிக சிரம்மத்தில் கடந்தோட கெட்டிக்கார பெண் குழந்தை பள்ளி படிப்பின் இறுதி ஆண்டு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவியாய் தேறி விட்டால்

இனி அடுத்து என்ன ? பட்ட படிப்புக்கு பல்கலைகழகம் சேர வேண்டும் அகதியாய் குடிலில் கஷ்ட்ட வாழ்க்கை பட்ட படிப்பு சத்தியம்மா ? எட்டா கனியாய் பட்ட படிப்பு …

தளர வில்லை தந்தை கெட்டிக்கார மகளை எப்படியாவது படித்த பட்டாதாரி ஆக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தனக்கு தெரிந்த முன்னைய பல செல்வந்த நண்பர்களை நாடினார் மகளின் படிப்புக்கு உதவும்படி வேண்டினார் முடிவு எல்லோரும் கையை விரிக்க

இறுதியில் இவரின் இளமை கால பள்ளி நண்பரொருவர் உதவ முன் வர மகளும் பட்ட படிப்புக்காய் பல்கலை கழகம் சேர்ந்தாச்சி

மகன் படிப்பு சரியாய் வரவில்லை என்று பல இடங்களில் சிற்றுளியறாய் பணியாற்றி ஒருவாறு தனது சுய முயற்சியால் வெளிநாடு செல்ல , தந்தையின் பாதுகாப்பில் மகள் பட்டபடிப்பை முடிக்க .,

மகளின் இறுதியாண்டு தேர்வு வெளிவர தேர்வில் மகள் படித்த நிர்வாக துறையில் பல்கலைகழகத்தில் முதல் வகுப்பில் , முதல் மாணவியாய் தேற மகிழ்ச்சி வெள்ளத்தில் தந்தையும் தனயனும் மகளும்

இனி தான் படித்த படிப்புக்கேற்ற வேலை தேடும் படலம் … பல நிறுவனங்களில் முயற்சி …
சர்வதேசத்தோடும் தொடர்புடைய புகழ் பெற்ற நிறுவனத்தில் இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வர நேர்காணலுக்கு சென்றால் நிறுவனத்துக்கு இவளின் அனைத்து தகுதியும் பிடித்துவிட இவளையே அந்த பதவிக்கு நியாமிக்க தீர்மானம் எடுத்து விட்டது
62 ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளம் இன்னும் பல சலுகைகளோடும் .,
ஆனால் ஒரு நிபந்தனையை அந்த நிறுவனம் கட்டாயமாய் விதித்தது நீங்கள் உங்கள் தலையில் கட்டியுள்ள ” ஹிஜாப் ” பை அகற்றி விட்டே பணிக்கு வர வேண்டும் சம்மதமா ? என்று அந்த நிறுவனம் வினவ ஒருகணம் திடுக்கிட்ட அந்த பெண் மறு செகன்ட் .,

நான்பணிக்கு வருவதாய் இருந்தால் ” ஹிஜாபோடுதான் “வருவேன் அதற்க்கு நீங்கள் சம்மதம் இல்லைஎன்றால் உங்களது நிறுவனத்தில் எனக்கு வேலை தேவை இல்லை நன்றி … என்று கூறி எழுந்து வந்து விட்டாள்

வீட்டுக்குக்கு வந்த மகளிடம் நேர்காணல் போன விடயமாய் தந்தை வினவ நடந்த சம்பவங்களை விவரிக்க நீ சொன்ன பதில் மிகவும் சரியானது அல்ஹம்துலில்லாஹ் … என்று சொன்ன தந்தை , உனக்கு இதைவிட சிறப்பான இடத்தில் வேலை கிடைக்கும் என்று சொல்லி திருப்தி பட்டு கொண்டார்

சிறிது நாட்களில் வெளிநாட்டில் இருக்கும் சகோதரன் தனது சகோதரியை ” விசிட்டிங் விசாவில் “தான்இருந்த நாட்டுக்கு அழைத்து செல்ல , தனது சகோதரியின் படிப்பு , திறமை பற்றி பல நண்பர்களிடம் சொல்ல .,
அதன் மூலம் அந்த சகோதரிக்கு அந்த நாட்டின் மன்னரின் மனைவிக்கு உதவி செயலாளர் ஆக பணியாற்ற பதவி கிடைக்க , தனது திறமையால் , நேர்மையால் ” அரசியின் ” நம்பிக்கைக்கு பாத்திரமான உயர் பதவி கிடைக்க லட்சத்திற்கும் அதிகமான கை நிறைய சம்பளம் மனசு நிறைந்த வேலை என்று தொடர ,

சிறிது நாட்களில் மன்னரின் மருத்துவ குழுவில் மருத்துவராய் இருக்கும் ஒரு இளம் மருத்துவருக்கு இந்த பெண்ணின் குணம் பிடித்து போக , முறைப்படி தந்தை , சகோதரனிடம் பேசி திருமணம் சிறப்பாய் நடந்தேறியது

அன்று தலைநகரில் அகதியாய் வந்து சின்ன ஒரு தகர குடிசையில் கஷ்ட வாழ்க்கை வாழ்ந்து வந்த குடும்பம் ,

இன்று அதே தலைநகரில் பெரும் செல்வந்தர்கள் வாழும் பகுதியில் மிக பெரிய பங்களா , நவீன ரக வாகனம் என்று தந்தை , சகோதரன் ஆகியோரோடு மிக சிறப்பான வாழ்க்கை வாழ்கின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ் …

சமிபத்தில் தலைநகரில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்துக்கு நானும் போய் இருந்தபோது அந்த பெண்ணையும் ,அவள் கணவரையும் , தந்தை , சகோதரனையும் , எனது நண்பர் சுருக்கமாய் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் பார்த்து பேசி மகிழ்ந்தேன் …

அந்த பெண்ணை பார்த்தேன் மிகவும் அடக்கமாய் இருந்தார் ” தலையில் ஹிஜாப்புடன் ”

இந்த குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் வேறு யாரும்மில்லை , இந்த பெண் பட்ட படிப்பு படிக்க உதவி செய்தவர்தான்

உதவி செய்தவர்
எனக்கு நல்ல நண்பர்…

நன்றி: Peer Mohamed

-Madawala News-

Post a Comment

0 Comments