Subscribe Us

header ads

மைத்திரியின் ஆசிர்வாதத்துடனே ராஜபக்ச எதிர் அணி இன்று உருவாக்கம்! இந்திய நாளிதழ்


மஹிந்த ராஜபக்சவை ஆகஸ்ட் 17 நடைபெறவுள்ள தேர்தலின் ஊடாக ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதற்கு ராஜபக்ச எதிர் அணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசிர்வாதத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையில், ஐக்கிய தேசிய முன்னணி அலரி மாளிகையில் இன்று உருவாக்கப்படவுள்ளது.

இந்தநிலையில் இந்த முன்னணி, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடனேயே ஆரம்பிக்கப்படுவதாக அலரி மாளிகையின் அதிகாரியான சமன் அத்தாவுடஹெட்டி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பை பொறுத்தவரையில் தாம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே மஹிந்த ராஜபக்சவுக்கான வேட்புமனுவை நிராகரிக்க முடியவில்லை என்று மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் விலகி ராஜபக்ச எதிர் அணியை தோற்றுவிக்கப்போவதாக கூறியபோது அதனை மைத்திரிபால அனுமதித்தார். தமது ஆசிர்வாதம் அவர்களுக்கு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் 13ஆம் திகதியன்று தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது நிறைவடைந்ததும், ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதில் ஊழலற்ற, சர்வாதிகாரம் இல்லாத வேட்பாளர்களை தெரிந்தெடுக்குமாறு அவர் மக்களை கோருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments