Subscribe Us

header ads

மஹிந்த சாதாரண வேட்பாளராக களமிறங்கமாட்டார்: வாசு அதிரடி தகவல்

ப. பன்னீர்செல்வம்


எதிர்வரும் பொதுத் தேர்தலில் சாதாரணமாக எம்.பி. பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட தயார் இல்லை என தெரிவிக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடலாம் என்ற சுசில் பிரேமஜயந்தவின் அறிவிப்பை நிராகரிப்பதாகவும், தாம் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து மஹிந்த ராஜபக்ஷவை தலைமைத்துவ வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளமை தொடர்பில் அவரிடம் வாசுதேவ நாணயக்காரவிடம் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment

0 Comments