Subscribe Us

header ads

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: ஜனாதிபதி


சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள் அதில் இருந்து முற்றாக விலகுவது அத்தியவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்படியான வர்த்தக தொடர்புகளை கொண்டு அரசியல்வாதிகளுக்கு கட்சி மற்றும் தகுதி தராதர பேதமின்றி கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜா-எலயில் இன்று நடைறெ்ற போதையில் இருந்து விடுதலை பெற்ற நாடு என்ற தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

காவற்துறையினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர் போதைப் பொருள் ஒழிப்பில் ஈடுபட்டாலும் இரண்டு பிரதான அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இந்த போதைப் பொருள் வர்த்தகதுடன் சம்பந்தப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவுகளின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டுக்குள் பொருட்களை விநியோகிக்கும் பொறுப்பினை கொண்டுள்ள இந்த இரண்டு நிறுவனங்களின் அதிகாரிகள் மிக நீண்டகாலமாக போதைப் பொருள் வர்த்தகத்துடன் சம்பந்தப்பட்டுள்ளனர்.

போதைப் பொருளின் இருந்து தற்காத்து கொள்ள மக்களுக்கு தெளிவுப்படுத்தும் அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் போதைப் பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

நாட்டில் வாழும் வறிய மக்கள் தாம் உழைக்கும் பணத்தில் மூன்றில் ஒரு வீதத்தை போதைப் பொருளுக்காக செலவிடுகின்றனர்.

வறுமை அதிகரிக்கவும் நோயாளர்கள் அதிகரிக்கவும் போதைப் பொருள் நேரடியான காரணியாக அமைந்துள்ளது எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments