கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம்_
இவ்வருடத்திற்கான புனித நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் கொத்துபா பேருரை கத்தாருக்கான இலங்கை தூதரக வளாகத்தில் இன்று (17-07-2015) நடைபெற்றது.
"Srilankan Majlis Qatar" அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இப்பெருநாள் தொழுகையில் இலங்கையின் பல பாகங்களை சேர்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் என வெவ்வேறாக நடைபெற்ற இப்பெருநாள் தொழுகை "Srilankan Majlis Qatar" அமைப்பினால் ஒன்றரை தசாப்தமாக ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 Comments