Subscribe Us

header ads

ஒரே ஒரு போன் செய்தால் போதும்..மது பாட்டில் வீடு தேடி வரும்: அரசின் புதிய திட்டம்


ஆந்திராவில் போன் அல்லது ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் மது பானம் வீடு தேடி வரும் என்று அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில கலால் துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் ஸ்ரீநரேஷ் இதுகுறித்து கூறுகையில், ஆந்திராவில் வைசாக், விஜயவாடா, ராஜமுந்திரி, காக்கி நாடா மற்றும் குண்டூர் பகுதியில் உள்ள 5 மால்களில் மதுக்கடை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ராஜமுந்திரி, பீமாவரம், விஜய வாடா, குண்டூர் பகுதிகளில் உள்ள ஷாப்பிங் மால்களில் கூடுதல் மதுக்கடைகள் திறப்பதற்காக அனுமதி கொடுக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

10 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள மால்களில் மட்டுமே மதுக்கடை திறக்க அனுமதி வழங்கப்படும்.

ஆந்திர அரசு சார்பில் 436 மதுக்கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 415 மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மதுக்கடைகள் விரைவில் திறக்கப்படும்.

அரசு மதுக்கடைகளில் மது பாட்டில்களில் அச்சிடப்பட்ட விலைக்கே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படும்.
சில தனியார் மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதால், தனியாரின் போட்டியை சமாளிக்க அச்சிடப்பட்டுள்ள விலைக்கே மது விற்பனை செய்யப்படுகிறது என்று பிரசாரம் செய்ய உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆந்திராவில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதால், வீட்டுக்கே டெலிவரி செய்தால் மது விற்பனையை அதிகரிக்க முடியும் என்று ஆந்திர அரசு நம்புகிறது.

Post a Comment

0 Comments