ரியாத் மாநகரில் முஸ்லிம் ஒருவர் ஒரு கடையில் சில பொருட்களை வாங்கினார் கடையில் பணியாற்றும் வெளி நாட்டை சார்ந்த இளைஞர் வாடிக்கையாளர் வாங்கிய பொருளுக்கான பெட்டியை கொடுப்பதர்கு பதிலாக வேறு ஒரு பெட்டியை கொடுத்து விட்டார்
அவர் கொடுத்த பெட்டியில் தான் முதல் நாள் நடந்த வியபாரத்தின் ரியால்களை வைத்திருந்தார் சுமார் இந்திய மதிப்பில் பல ஆயிரம் ரூபாய்கள் மதிப்புள்ள சவுதி ரியால்களை சுமந்திருந்த அந்த பெட்டியை தவறதலாக கொடுத்து விட்ட பிறகு அதனை அறிந்து அந்த ஊழியர் வருந்தினர்
வாங்கி சென்ற வாடிக்கையாளரின் முகவரி இவரிடம் இல்லாததால் அவரால் வாடிக்கையாளரை தேடி சென்று அந்த பணத்தை திரும்ப பெறமுடியாமல் தவித்து கொண்டிருந்தார்
இதர்கிடையே பொருளை வாங்கி சென்றவர் வீட்டில் சென்று பெட்டியை திறந்து பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார் அவர் வாங்கிய பொருள் பெட்டியில் இல்லாமல் பெட்டியில் சவுதி ரியால்கள் இருந்தது
அவர் கொடுத்த பணத்தை விட பல மடங்கு அதிகம் பணம் அந்த பெட்டியில் இருந்தும் அதை அவர் விரும்பாமல் உடனடியாக பொருள் வாங்கிய கடையை தேடி சென்று பெட்டியை ஒப்படைத்து விட்டு அவர் வாங்கிய பொருளுக்கான பெட்டியை பெற்று வந்தார்
முதலாளியிடம் என்ன சொல்வது தவறாக நாம் கொடுத்து விட்ட பணத்தை எப்படி சரி கட்டுவது என்று தர்ம சங்கடத்தில் தவித்து கொண்டிருந்த வெளிநாட்டு இளைஞன் நன்றி உணர்வோடு அந்த பெட்டியை பெற்று கொண்டு அவருக்கு உரிய பொருளை அவரிடம் ஒப்படைத்தார்
முஸ்லிம் நம்பிக்கையின் அடையாளமாக இருப்பான் என்பதை உணர்த்தும் சிறந்த நிகழ்வுகளில் ஒன்றாக இந்த நிகழ்வு அமைகிறது


0 Comments