Subscribe Us

header ads

அம்பாறை மாவட்டத்தில் ஹுதாஉமரும் களத்தில் வரலாம்?


நாடு மிக விரைவில் போர் களமாக மாற இருக்கும் இந்த பொது தேர்தலில் பல கட்சிகளும் தமது இருப்பை தக்கவைத்து கொள்ள படாத பாடு படப்போவது சகலரும் அறிந்ததே.அந்த வகையில் மிக அண்மையில் தோற்றம் பெற்று வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தமது வேட்பாளர்களை போட்டியிட செய்ய போவதாக அறிவித்திருந்தது. அந்தவகையில் அந்த கட்சியின் சார்பில் யாரார் போட்டியிட போகிறார்கள் என்பதை ரகசியமாக வைத்திருந்து இறுதியில் அறிவிப்பதாக இருந்த வேளையில் இப்போது அந்த கட்சியின் வேட்பாளர்களாக களமிறங்கலாம் என சந்தேகிக்கும் பலருடைய பெயர்கள் கசிய ஆரம்பித்துள்ளது.


இந்த வகையில் தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சார்பில் அந்த கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும்,கட்சி நிறைவேற்று குழு அங்கத்தவருமான அல் ஹாஜ் நூறுல் ஹுதா உமர் (J .P )களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அறிய முடிகிறது.கணணி துறை சார் பட்டதாரியான இவர் முதலாவது இளையோர் பாரளுமன்ற தேர்தலில் தமிழ் சகோதரர்கள் அதிகம் வாழும் பிரதேசத்தில் போட்டியிட்ட ஒருவராவார். அத்துடன் இளைஜர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் கீழே உள்ள NYSC இல் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தில் மிக முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.அத்துடன் NYSCO வின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் சபையிலும் பதவி வகித்துள்ள இவர் இலங்கையின்தமிழ்,முஸ்லிம்,சிங்கள,சகோதரர்களை உள்ளடக்கிய முன்னணி சமுக சேவை நிறுவனமான அல் மீசன் பவுண்டசனின் தவிசாளராக இருந்துசுதந்திர கட்சியின் உதவிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாத பல சேவைகளை அம்பாறை மாவட்டத்தில் செய்துள்ள இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,சுதந்திர கட்சி போன்றவற்றின் வெற்றிக்காக அம்பாறை மாவட்டத்தில் உழைத்த ஒருவரும் கூட. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இந்த கட்சியின் முக்கிய பதவி வகிக்கும் இவர் இம்முறை பொது தேர்தலில் களமிறங்க போவதாக அறிய முடிகிறது.



எழுத்தாளராக,ஊடகவியலாளராக ,மேலும் பல துறைகளினுடாகவும் சமுக சேவை செய்வதில் முன்னின்று உழைக்க கூடிய சக்தி கொண்ட இவர்
இந்த தேர்தலில் களமிரங்குவதன் மூலம் அந்த கட்சி வாக்கு வங்கியில் பாரிய முன்னேற்றம் ஏற்படலாம். இது இவ்வாறிருக்க இவரின் சகோதரர் கூட இம்முறை மிக முக்கிய முஸ்லிம் கட்சியில் களமிறங்க உள்ளதாக அறிய முடிகிறது.எது எப்படியாக இருந்தாலும் வெளிநாட்டில் பணி நிமிர்த்தம் சென்றுள்ள இவர் விரைவில் நாட்டை வந்தடைய உள்ளார்.இவருடன் இணைந்து கடந்த பொது தேர்தல்களில் களமிறங்கியிருந்த பல முக்கியஸ்தர்களும் களமிறங்க வாய்ப்புள்ளதாக அறிய முடிகிறது.  


செய்தி: அர .மாதவி 
(கல்முனை நிருபர் )

Post a Comment

0 Comments