Subscribe Us

header ads

சம்மாந்துறையில் முஸ்லிம் காங்கிரசின் சூறாவளிப் பிரச்சாரம் ஆரம்பித்தது..!!


கடந்த 2015.07.22 ஆந் திகதி இரவு சம்மாந்துறை மல்கம்பிட்டி 03 ஆம் குறுக்கு வீதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான முஸ்தபா அவர்களின் தலைமையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்ப பிரச்சார கூட்டம் இடம் பெற்றது.

இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டவர்களையும் தாண்டி, பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்கள் வெள்ளம் அலைமோதியதை காணக்கூடியதாக இருந்தது.இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் அனைவரினதும் முகத்திலும் ஒரு தசாப்த காலமாக சம்மாந்துறை மண் இழந்து நிற்கும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை இம்முறை எப்படியாவது பெற வேண்டும் என்ற உத் வேகம் காணப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.


மேலும்,இக் கூட்டத்தில் கலைக்கப்பட்ட பிரதேச சபையின் தவிசாளர் நௌசாத் மற்றும் மாகாண சபை உறுப்பினர் அமீர் அவர்களுடைய பெரும்பாலான ஆதரவாளர்களும் கலந்து இருந்தனர். குறிப்பாக கட்சியின் ஆரம்ப போராளிகளாக இருந்து, அமைச்சர் அன்வர் இஸ்மாயிலுடன் கட்சியை விட்டு விலகிச் சென்ற, மிக முக்கிய பிரமுகர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதனை அவதானிக்க முடிந்தது. இத்தேர்தல் நடவடிக்கைகளில் தாங்களும் கலந்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைக்கவுள்ளதாகவும் பிரகடனம் செய்தனர்.சம்மாந்துறையினைச் சேர்ந்த பல உலமாக்கள் கலந்து கொண்டமை இக்கூட்டத்தின் விசேட அம்சமாகவும்

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் உரையாற்றும் போது, மக்கள் அனைவரும் ஒற்றுமையாக யானை சின்னத்திற்கும், தங்களுடைய 02, 09, 10 ஆகிய இலக்கங்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, ஒற்றுமையின் மூலமே இதை சாதித்துக்காட்ட முடியும் என்பதையும் தெரிவித்தனர்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.




Post a Comment

0 Comments