Subscribe Us

header ads

கொடூர விபத்து நடந்த இடத்தில் குதூகலமாய் செல்பி எடுத்த வாலிபர்



செல்பி மோகம் பலரை மனிதாபிமானம் இல்லாத மனிதர்களாக மாற்றி வருவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், இங்கிலாந்தின் மையப்பகுதியில் கொடூர விபத்து நடந்த இடத்தில் வாலிபர் ஒருவர் செல்பி எடுத்துக் கொண்டது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

லண்டனின் மையப்பகுதிக்கு அருகே உள்ள A406  என்ற பை பாஸ் ரோட்டில் நேற்று மதியம் 3.15 மனியளவில் இரண்டு லாரிகளும் ஒரு காரும் மோதிக் கொண்டது. இதில் காரில் இருந்த இளம்பெண் இறந்து விட்டாரா? என்று அங்கு கூடிய பொது மக்கள் பதைபதைப்புடன் காத்திருந்தனர். உடனடியாக சம்பவ இடத்திர்கு வந்த அவசரகால மீட்புப்படையினர் ஒரு மணி நேரமாக போராடி அந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணுடன் காரில் வந்த 2 பென்கலுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த கொடூர விபத்தால் அந்த பை பாஸ் சாலை பல மணி நேரமாக மூடப்பட்டது.

இந்த களேபரங்களுக்கிடையில், விபத்து நடந்த பகுதிக்கு அருகே உள்ள பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், தனது ஐபோனில், தன்னோடு விபத்து நடந்த இடமும் கேமராவில் தெரியுமாறு போஸ் கொடுத்தபடி செல்பி எடுத்துக் கொண்டார். இது இங்கிலாந்து ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியானது. இந்த காட்சியைப் பார்த்து கொந்தளித்த பலர் அந்த வாலிபரை வசை பாடி வருகின்றனர்.




Post a Comment

0 Comments