சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு 11 மணிக்கு ரயிலில் ஏறியபோது தான் சஹர் உணவு குறித்து நினைவு வந்தது.
விழுப்புரத்தில் இரவு 1 மணிக்கு வண்டி நின்றபோது ரெயில்வே கேண்டினில் சாப்பிட ஏதாவது இருக்கிறதா எனக் கேட்டேன்.
பரோட்டா குருமா இரண்டு பொட்டலங்களும், உப்புமா இரண்டு பொட்டலங்களும் இருப்பதாக சொன்னார்.
பரோட்டா குருமாவை வாங்கிக் கொண்டு காலையில் 4 மணி வரைத் தாங்குமா ? எனக் கேட்ட போது அதெல்லாம் நல்லா இருக்கும் சார் என வழக்கமான பதிலை கூறியவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை பிறகு அழைத்து அதை வைத்து விடுங்கள் என காசை திருப்பித் தந்தார்.
ஏன் என்று கேட்டதற்கு மத்தவங்கன்னா பரவாயில்லை, நீங்க நோன்பு வைக்க கேட்கறீங்க, குருமா வீணாகி என்னால் உங்க நோன்பு வீணாகி விடக்கூடாது அதனால் தான் என்றார்.
பிறகு அவரிடமே பிரட் கேக் வாங்கி நோன்பு வைத்தேன்...
இரவு ஒரு மணிக்கு மேல் மீதமிருந்த உணவை விற்று காசு பார்க்கும் எண்ணமில்லாமல் தன்னால் இன்னொருவரின் நோன்பு வீணாகி விடக்கூடாது எனும் அவரது எண்ணமும் மற்றவர்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தமிழக மக்களின் மாண்பும் உணமையிலேயே இந்த மண்ணில் மதசார்பின்மையை பறைசாற்றுகிறது.
இறைவன் இவர்களுக்கு அருள்புரிந்து தனது நேர்வழியில் செலுத்தட்டும்!
தகவல் உதவி : செங்கிஸ்கான்.
-Muganool Muslim Media-


0 Comments