Subscribe Us

header ads

கட்சி பற்றா...சமுதாய பற்றா...

-IBRAHIM NIHRIR-


புத்தளம் வாழ் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஆர்வலர்கள், அபிமானிகள் இறுதி முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தாச்சு...

கடந்த பல மாதங்களாக கொழும்புக்கும், புத்தளத்துக்குமாக அலைந்து திரிந்து எடுத்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகி போனது...எதிர்கால எம்.பி. என்னும் கனவு கானல் நீராக ஆனது...வாக்கு வங்கியையும், போனஸ் ஆசனத்தையும் மட்டுமே குறி வைத்து இயங்குகின்ற தலைமை பீடம் இலங்கையின் ஓரத்தில் இருப்பதாலோ என்னவோ புத்தளத்தையும் ஓரம் கட்டி வைத்துவிட்டது...இலவு காத்த கிளிகளாக்கி எம் இளவல்களின் கைகளில் இலவு விழுந்த செய்தியை நேற்று கொடுத்து கொழும்பில் இருந்து திருப்பி அனுப்பிவிட்டது...

பெரிய பள்ளியில் நடந்த கூட்டத்தில் தனித்து களமிறங்குவேன், வெற்றி வாகை சூடுவேன் என்று சபதமிட்ட நவவி காக்காவிடம், "நானும் தேசிய அமைப்பாளராக இருந்தவன்தான்...அனைத்து ரகசியங்களையும் அறிந்தவன்தான்...உங்கள் கனவு பலிக்காது...பாவம் நீங்கள்" என்று பாயிஸ் சொன்னதை மறக்க முடியவில்லை...

இனி என்ன வழமை போல நஸ்மியும் , நியாசும் யானை சின்னத்தில் களமிறங்குவார்கள்...அவர்களுக்கான தேர்தல் பெறுபேறு 8ஆவது 9ஆவது இடம் என்று வானொலியும் டிவியும் செய்தி பத்திரிகையும் அலறி அதிகாலை துயிலெழுப்பும்...

எம்மவர்கள் உடலும், உள்ளமும் களைத்து அலுத்து சோர்ந்து போன நிலையில் இதுதாண்டா அரசியல் என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வழமைக்கு திருப்புவார்கள்...மேலிடத்தின் வாக்குறுதிகள், கவர்ச்சி அறிக்கை மறுபடியும் வரும்போது அடுத்த தேர்தலுக்கு தயாராகுவார்கள்...

சமுதாயத்தின் மீது பற்றுக் கொண்ட உடன் பிறவா சகோதரர்களே...வீராப்பு அரசியலை விட்டு விட்டு விவேகமான அரசியலுக்குள் நுழைவோம், வாருங்கள்...

Post a Comment

0 Comments