கஃபாவின் காவலர்கள் அவர்களின் பணியை இறையருளால் மிக கவனமுடன் செய்து வருகின்றனர் என்பதை உறுதி படுத்தும் ஒரு நிகழ்வு நேற்றைய தினம் மக்காவில் நடை பெற்றது
ரமளானின் முதல் பத்து நாட்களில் மட்டும் கஃபாவை தரிசிக்க வந்தவர்களின் எண்ணிக்ககை 80 இலட்சத்திர்கும் அதிகம்
இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் கஃபாவிர்கு வருவதால் அங்கு தவாப் நடைபெறும் போது நெருக்கடி அதிகமாக இருக்கும்
இடை வெளி இல்லாமல் மக்கள் ஒருவர் பின் ஒருவாக தொடர்ந்து வந்து கொண்டிருப்தால் ஒருவர் கீழே விழுந்து வி்ட்டால் அவர் எழுவதர்கு முன்பு மற்றவர்களின் கால்களால் மிதி படுவதர்கு உரிய வாய்ப்புகள் அதிகம்
பெரியவர்களின் நிலையே இது வென்றால் குழந்தைகளின் நிலையை பற்றி சொல்ல தேவையே இல்லை அதும் கைகுழந்தைகள் அந்த நெரிசலில் கீழே விழுந்து விட்டால் இறைவனின் பிரத்தியோக அருள் இருந்தாலே தவிர உயிரோடு மீண்டு வருவது சிறமம்
இந்த சூழலின் நேற்றைய தினம் ஒரு தாய் பிறந்து சில மாதங்களே ஆன தனது குழந்தையை சுமந்த நிலையில் கடும் கூட்டத்திர்கு இடையே கஃபாவை சுற்றி கொண்டிருந்தார்
திடீர் என்று அவருக்கு உடல் நல குறைவு ஏர்படவே அவர் சுமந்திருந்த பச்சிழம் குழந்தை அவரது கையில் இருந்து நழுவி கூட்ட நெரிசலில் விழும் நிலைக்கு வந்து விட்டது
இதை கவனித்த கஃபாவின் காவலர் ஒருவர் விரைந்து சென்று அந்த குழந்தை கூட்ட நெரிசலில் விழுந்து மிதிபடா வண்ணம் தனது கையில ஏந்தி கொண்டார்
பிறகு உடனே செம்பிறை சங்கத்தினரை அழைத்து அந்த தாயிக்கு தேவையான முதல் உதவி சிகிட்சையை வழங்கி பாது காப்பாக தாயையும் பிள்ளையையும் அனுப்பி வைத்தார்.
நன்றி : உண்மை தமிழன்
-VKALATHUR-
0 Comments