சூடான காற்றால் உந்தித் தள்ளப்படும் பலூன்களில் சிலவற்றை விண்ணில் பறக்கவிடுவது என்பதே மிகவும் சிரமமானது காரணம் 2 பலூன்கள் உரசி கிழிந்து விடும் அபாயம் இருப்பதே.
இந்நிலையில், நேற்று கிழக்கு பிரான்சின் சாம்ப்ளி-பசியர்சில் உள்ள விமான தளத்திலிருந்து, 433 ராட்சத பலூன்கள் வானில் செலுத்தப்பட்டது. அதிகளவு பலூன்களை வானில் பறக்க விடுவதில் இதுவே உச்சகட்ட சாதனையாகும். இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியில் 40 நாடுகளைச் சேர்ந்த பலூன் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனையின் மூலம் பலூன்களின் வரலாற்றில் ஒரு புதிய பக்கம் எழுதப்பட்டுள்ளதாக, இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இதே இடத்தில் 391 பலூன்கள் பறக்க விடப்பட்டதே பலூன்களின் வரலாற்றில் அதிக பட்ச சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.





0 Comments